கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமும், போர்ச்சுக்கல் நாட்டின் தேசிய வீரருமான ரொனால்டோ தற்போது இத்தாலி கிளப் அணியான ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2009-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி லாஸ் வேகாஸில் உள்ள விடுதி ஒன்றில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மையோர்கா என்ற பெண் வழக்கு தொடர்ந்தார். பாலியல் குற்றச்சாட்டை மறுக்காமல் உண்மையை ஒப்புக்கொண்ட ரொனால்டோ விருப்பத்துடன் (இருதரப்பு) கூடிய உறவு என்றும் அதற்கான இழப்பீடு தருவதாகக் கூறி கேத்ரினை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் கேத்ரின் தரப்பு சட்டப்படி பிரச்சனையைக் கொள்வோம் என நீதித்துறையை எதிர்பார்த்தது. இந்நிலையில் லாஸ்வேகாஸ் பாலியல் விவகார வழக்கு தொடர்பான இறுதி விசாரணை திங்களன்று நடைபெற்றது. பரபரப்பான வாதத்திற்குப் பின்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் லாஸ்வேகாஸ் விடுதி வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வீடியோ மற்றும் புகைப் பட ஆதாரங்களை கேத்ரின் தரப்பு வெளி யிட்டும் ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.