tamilnadu

img

பிபா கால்பந்து விருது சிறந்த வீரராக மெஸ்ஸி

ஒவ்வொரு வருடமும் கால்பந்து உலகில் சிறப்பாக விளையாடும் வீரர் - வீராங்கனைகளுக்குச் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால்(பிபா)   ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான பிபா கால்பந்து விருதுகள் இத்தாலியின் முக்கிய நகரான மிலனில் திங்களன்று (இந்திய நேரப்படி செவ்வாயன்று அதிகாலை) நடைபெற்றது.

சிறந்த வீரர் : அர்ஜெண்டினாவின் கேப்டனும், பார்சிலோனா (ஸ்பெயின் கிளப்) அணியின் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி 46 புள்ளிகளைப் பெற்றுச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 
சிறந்த விக்கெட் கீப்பர் : சிறந்த விக்கெட் கீப்பருக்கான விருதை பிரேசில் நாட்டின் கோல்கீப்பரும், லிவர்பூல் (இங்கிலாந்து கிளப்) அணிக்காக விளையாடி வருபவருமான அல்லிஸ்சன் வென்றுள்ளார். 
சிறந்த பயிற்சியாளர் : லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் ஜூர்கன் குளோப் (ஜெர்மனி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
சிறந்த வீராங்கனை : அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் ராபினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கக் கால்பந்து கிளப்பான ரெஜின் அணிக்காக விளையாடி வருகிறார்.   
சிறந்த விக்கெட் கீப்பர் (மகளிர்) : சாரி வான் (நெதர்லாந்து). கிளப் : அதெல்டிக்கோ மாட்ரிட் (ஸ்பெயின்) 
சிறந்த பயிற்சியாளர் (மகளிர்) : ஜில்லி எல்லிஸ் (அமெரிக்கா). இவர் கிளப் அணிக்குப் பயிற்சி அளிக்கவில்லை.  
நேர்மையான ஆட்டம் (FAIR PLAY) விருது : மார்ஸிலோ பியல்ஸா (லீட்ஸ் யுனைடெட்) 
சிறந்த கோல் : டேனியல் ஸ்ஜோரி (ஹங்கேரி) 
சிறந்த ரசிகர் : சில்வியா கிரிகோ (பிரேசில்)