tamilnadu

img

ஆப்பிரிக்க கால்பந்து லீக்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய கால்பந்து திருவிழாவான ஆப்பிரிக்கக் கோப்பை கால்பந்து தொடரின் 32-வது பதிப்பு எகிப்து நாட்டின் முக்கிய நகர மான சாண்டியோ மானேவில் நடைபெற்று வருகிறது.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எகிப்து, கானா அணிகள் நாக் அவுட் சுற்றிலும், தென் ஆப்பிரிக்கா, மொரோக்கோ ஆகிய அணி கள் காலிறுதியிலும் வெளியேறிய நிலையில், செனகல், நைஜீரியா, அல்ஜீரியா, துனிசியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னே றின. அரையிறுதியில் செனகல் அணி துனி சியாவையும், அல்ஜீரியா அணி நைஜீரி யாவையும் வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.  மூன்றாவது இடத்திற்கான ஆட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அரையிறுதியில் தோல்வி யடைந்த நைஜீரியா - துனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் துனிசியா வீரர்களின் தவற்றால் நைஜீரியா வின் ஒடியன் இக்ஹலோ கோலடித்தார். பதி லடி கொடுக்க துனிசியா வீரர்கள் கடுமை யாகப் போராடியும் நைஜீரியாவின் தடுப்பை உடைக்க முடியவில்லை. இறுதியில் நைஜீரியா 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தைபெற்றது. செனகல் -அல்ஜீரியா இறுதிப்போட்டி  சனியன்று அதிகாலை 12:30 மணிக்கு நடைபெறுகிறது.