tamilnadu

img

இந்தியா மீதான தடையை நீக்கியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

இந்தியாவில் நடைபெறும், சர்வதேச போட்டிகளில் தகுதியான வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்று இந்தியா அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்ததையடுத்து இந்தியா மீதான தடையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நீக்கியுள்ளது.

டெல்லியில், கடந்த பிப்ரவரி மாதம், துப்பாக்கி சுடுதலுக்கான உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் சர்வதேச போட்டிகள் நடத்த இந்தியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) தடை விதித்தது. 

இதையடுத்து, இந்தியாவில் நடக்கவிருந்த ஜூனியர் உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடரை உலக மல்யுத்த கமிட்டி வேறு இடத்துக்கு மாற்றியது. அதே போல கடந்த ஆண்டில் கொசாவா நாட்டுடன் இந்தியாவிற்கு நல்லுறவு இல்லாத காரணத்தால், டெல்லியில் நடந்த பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் பங்கேற்க அந்நாட்டு வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்தது. இதில் அதிருப்தி அடைந்த ஐஓசி, இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்த தடை விதித்தது.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் தகுதியான வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்று இந்திய அரசு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்ததையடுத்து, இந்தியா மீதான தடையை ஐஓசி நீக்கியுள்ளது.
 

;