இந்திய கால்பந்து ரசிகர்களின் திருவிழாவான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) ஆறாவது சீசன் இப்போதே களைக் கட்டிவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, கோவா, கேரளா, புனே, ஜாம்ஷெட்பூர், கவுகாத்தி, மும்பை, ஒடிசா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவுள்ளன. கடந்த சீசனில் மொத்தம் 377 போட்டிகள் நடத்தப்பட்டு 956 கோல்கள் அடிக்கப்பட்டன. அதிகபட்சமாக கோவா அணி 154 கோல்களை அடித்தது. இந்த தொடரில் இந்தியா உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த 588 வீரர்கள் விளையாடினர்.
ரேஸில் முந்தும் பெங்களூரு
ஐஎஸ்எல் கால்பந்து களத்தை பொறுத்தவரை பெங்களூரு அணி வீரர்கள் சவால் கொடுப்பதில் கில்லாடிகள். சுனில் சேத்ரி தலைமையில் கடந்த முறை லீக் ஆட்டத்தின் முடிவில் முதலிடத்தோடு சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. அந்த அணியில் புதிதாக சேர்ந்துள்ள அகஸ்டோ குருனியன், ரஃபால் அகஸ்டோ ஆகிய இருவரும் புயல் போல் தாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
அதிரவைக்கும் கோவா
ஒரு காலத்தில் பிக் ஃபோர் எனப்படும் மிகப் பிரபலமான நான்கு கால்பந்து ஜாம்பவான் அணிகளை கொண்ட கோவா அணி சமீப காலமாக திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மாற்றத்துடன் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய கால்பந்தை மாற்று உலகுக்கு கொண்டு சென்று கட்டமைப்பில் கோவா ஆழமான வேர்களை நிறுவியுள்ளது. கடந்த சீசனில் உள்ளூர் வீரர்களை அதிகம் களமிறக்கி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்து கோப்பையை கோட்டை விட்டது. அடிமட்டத்திலிருந்து நீண்டகால திட்டங்களை வகுத்து செயல்படும் கோவா அணி, இம்முறை கோப்பைக்கு முத்தமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா விஸ்வரூபம்
கால்பந்து மீதான கேரளாவின் மோகம் நூற்றாண்டுகளை கடந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலேயே கால்பந்து காதலர்கள் அதிகம். கேரளத்தில் கால்பந்தே கடவுள். இதனால் எந்தப் போட்டியாக இருந்தாலும் பந்தை உதைக்க துவங்கியவுடன் உற்சாகம் பொங்கி வழியத் தொடங்கி விடும். கடந்த ஐந்து தொடர்களிலும் தொடர்ந்து வலிமையோடு முன்னேறிவரும் கேரளா பில்டர்ஸ் ஆசியாவிலேயே அதிக ரசிகர்கள் ஆதரவு பெற்ற அணியாகும். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஆறாவது சீசனின் தொடக்கமும் அமைந்திருந்தது. முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவை சொந்த மண்ணில் பந்தாடி அடக்கினர். இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வெல்ல துடித்துக் கொண்டுள்ளது.
அசத்துமா கொல்கத்தா?
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் கால்பந்து ரசிகர்கள் அனைவரின் கண்களும் ஏ.கே.டி (கொல்கத்தா) அணியின் மீது உள்ளன. ஏனென்றால் அது புகழ்பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டதாகும். எனவே அந்த அணி மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்ல தன் முழு திறமைகளையும் வெளிப்படுத்தும்.
புதுவரவு
இந்த சீசனின் புதிய வரவான ஹைதராபாத் அணி மிகக் குறுகிய காலத்தில் சிறந்த அணியை களமிறக்கி இருக்கிறது. அந்த அணிக்காக மார்சிலினோ, மார்கோ ஸ்டாண்ட் கோவிச் போன்ற முக்கிய அனுபவ வீரர்களுடன் புதுமுகங்கள் களம் காண்கின்றனர். இதே போல ஒடிசா அணியும் அனுபவ வீரர்களான மார்க்கோஸ் டெபார், சிஸ்கோ ஹெர்னாண்டஸ் ஆகிய வெளி நாட்டு வீரர்களுடன் உள்நாட்டில் கலக்கி வரும் 21 வயதாகும் வினித் ராய் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த அணியில் இணைந்துள்ளதால் புது வரவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
மாறாதது ஏதும் இல்லை
இந்த சீசனில் வீரர்கள் மட்டுமல்ல கேரளா, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் அணிகளும் தங்களது பயிற்சியாளர்களை மாற்றியுள்ளது. ஸ்பெயினில் அனுபவமிக்க அன்டோனியா ஏரியாவை ஜாம்ஷெட்பூர் வளைத்துப் போட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் கோப்பையை வென்று கொடுத்த அன்டோனியோ ஹெபாஸை கொல்கத்தா அணி மீண்டும் இருகரம் கொண்டு வரவேற்று சேர்த்துள்ளது. அடுத்த ஐந்து மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்து புதிய சாதனைகள் நிகழ்த்தலாம். ஏராளமான சாதனைகள் முறியடிக்கப்படலாம். பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிகழலாம் என்று எதிர்பார்க்கலாம்.
கெத்து காட்டும் சென்னை எப்சி!
2014-ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் சென்னை அணி, இளைஞர்களை ஊக்கப் படுத்தி வருகிறது. இளசுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. அதற்கு பலனாக இரு முறை ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை வென்று கம்பீர மாக வலம் வந்தன. நடப்பு சாம்பியன் என்ற கெத்துடன் கடந்த சீசனில் களமிறங்கிய சென்னை அணியின் ஆட்டம் அதற்கு ஏற்றார்போல் அமைய வில்லை. கவுரவமான இடத்தையும் பிடிக்க முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இது முற்றிலும் மறக்கப்பட வேண்டிய ஒன்றா கும். இந்த சீசனுக்கு ஹாகிம் அலி,அபிஜித் சர்க்கார், தீபக் தாங்ரி ஆகிய மூன்று இளம் வீரர்களை சென்னை அணி ஒப்பந்தம் செய் துள்ளது. சுனில் சேத்ரி வழித்தோன்றலாக பார்க்கப்படும் ஜி ஜி லால் பெக்குலா முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பின் முழு மையான ஆட்டத்தையும் வெளிப்படுத்த சென்னை அணிக்காக கால்பந்து களம் காண்ப தும், உள்ளூர் வீரரான தனபால் கணேஷ் மீண்டும் விளையாட உள்ளதும் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்திய ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவரான லாலியன்ஸூ வாலா சாங்டே, தனது ஐரோப்பிய சுற்றுப் பய ணத்தை முடித்துக் கொண்டு ஐஎஸ்எல் தொட ருக்காக திரும்பியிருக்கிறார். அவரது வருகை சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்தி ருக்கிறது. அனைத்து வகையிலும் முழு தயா ரிப்புடன் களம் இறங்க உள்ளதால் கோப்பை யை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்தி ருக்கிறார்கள்.