தென் அமெரிக்க கண்டத்தில் மிக முக்கிய கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில் - பெரு அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. கோப்பை வென்றுள்ள பிரேசில் அணிக்கு இது 9-வது பட்ட மாகும். நடப்பு சாம்பியன் உருகுவே அணி 15 தடவை சாம்பியன் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா அணி (14) இரண்டாவது இடத்திலும், பிரேசில் (9) மூன்றாவது இடத்திலும் உள்ளது. அடுத்த ஆண்டுக்கான கோபா அமெரிக்கா கால்பந்து (2020) தொடர் அர்ஜெண்டினா நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.