tamilnadu

img

‘பி’ மாதிரி முடிவுகள் கோமதிக்குச் சாதகமாக அமையுமா?

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசியத் தடகள தொடரின் மகளிர்800 மீ ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தகோமதி மாரிமுத்து (30) தங்கம் வென்றுநாட்டிற்குப் பெருமை சேர்த்தார். ஒரு தொடர் நடந்து முடிந்தவுடன் வெற்றியாளர்களின் சிறுநீர் மாதிரியைச்சோதித்து ஊக்க மருந்து ஏதேனும் உண்டார்களா என செய்வது வழக்கமான நிகழ்வு தான்.தங்க மங்கை கோமதிக்கும்ஊக்க மருந்து பரிசோதனையின் முதல்கட்டமான “ஏ” மாதிரி சோதனை தோஹாவில் நடத்தப்பட்டது.இதில் நான்ட்ரோலோன் என்கிற ஸ்டீராய்ட் மருந்தை கோமதி உட்கொண்டிருப்பது தெரியவந்ததால் அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோமதி மறுப்பு 

இந்த விவகாரம் குறித்து ஆங்கிலஊடகங்களுக்குக் கோமதி மாரிமுத்து கூறியதாவது,”இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில் தான் பார்த்தேன்.நான் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதில்லை.ஆசியத்தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன் படுத்தினேன்” என்று கூறினார். 

சோதனை செயல்முறை 

ஊக்க மருத்து சோதனை சிறுநீர் மூலம் செய்யப்படுகிறது.”ஏ” மாதிரி, “பி” மாதிரி என இரண்டு வகையான சோதனைகள் இருந்தாலும்,இரண்டுமே ஒரே அடிப்படை செயல்முறை சோதனை தான்.முதலில் “ஏ” அடுத்து 4 நாட்கள்இடைவெளியில் “பி” என இரண்டுசோதனை முடிவுகளையும் வெளியிடுவார்கள். இரண்டு பரிசோதனைகளும் ஒரே ஆய்வகத்தில் செய்வதால் “ஏ”,“பி” முடிவுகளில் மாற்றம் வர வாய்ப் பில்லை. இருப்பினும் “பி” மாதிரி முடிவுகளில் ஆச்சரியம் நடந்தால் அதனைஅதிர்ஷ்டம் என எடுத்துக் கொள்ளலாம்.2009-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை முதல் ஊக்க மருந்து காரணத்துக்காக 100 இந்தியத் தடகள வீரர்களுக்குத் தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு(The National Anti-Doping Disciplinary Panel(ADDP)) தண்டனை அளித்துள் ளது.”பி” மாதிரி முடிவுகள் கோமதிக்கு எதிராக அமைந்தால் அவரும் இந்தப் பட்டியலில் இணைவார். “பி” மாதிரி சோதனையின் முடிவுகள்இன்று (வியாழனன்று) வெளிவரவுள்ளதாக இந்தியத் தடகள சம்மேளனத்தின்தலைவர் அடிலி சுமரிவாலா கூறியுள் ளார்.அதிலும் தோல்வியடைந்தால் கோமதி நான்கு ஆண்டுகள் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தமிழகவிளையாட்டு உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி உடலில் நுழைகிறது?

விளையாட்டு வீரர்கள் முன்பு ஊசி, மாத்திரை மூலம் ஊக்க மருந்தை செலுத்தி சிக்குவார்கள்.தற்போதைய நவீன காலத்தில் ஊக்கமருந்து பயன்பாடு குறைவு என்றாலும் குடிநீர்,பழச்சாறு, வலி நிவாரண மருந்துகள் மூலம்உடலில் நுழைகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் குடிநீரை நீர் சத்து, நார் சத்து இருப்பதாக கூறி விளம்பரம் செய்கின்றன. இதனை நம்பி வீரர்கள் வாங்கி பருகுவதால் உடலில்கெமிக்கல் தேங்கி விடுகிறது. இதே நிலை கோமதிக்கும் ஏற்பட்டிருக்கும்.