tamilnadu

img

மாதர் சங்க நடைபயணம்

போதையற்ற, வன்முறையற்ற தழிழகம் என்ற முழக்கத்துடன் மாதர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் நடைபயணத்தை வாழ்த்தி பொதுச் செயலாளர் சுகந்தியிடம் ரூ. 10ஆயிரத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்  செயலாளர் வி.அமிர்தலிங்கம் வழங்கினார்.  மாதர் சங்க அகில இந்தியத் தலைவர் உ.வாசுகி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.பழினிசாமி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.சண்முகம் ஆகியோர் உடன் உள்ளனர்.

****************

மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தில் மாதர் சங்க நடைபயணக்குழுவிற்கு  வாலிபர் சங்கம் சார்பில் சங்கு மணி மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது. இதில் வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா, மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன்,  செயலாளர் க.புருசோத்தமன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.