tamilnadu

img

நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் நிறைவு

காஞ்சிபுரம், ஜன.29- திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோயில் முதல் சென்னை வரை நடைபெற்று வரும் நீட் தேர்வு எதிர்ப்பு பயணம் செவ்வாயன்று (ஜன.28) காஞ்சிபுரம் வந்தடைந்தது. இந்த பிரச்சார பயணத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் கி.வீரமணி பேசிய தாவது:- ஒன்பதாவது அட்ட வணை பாதுகாப்பு,அரசியல் சட்டம் திருத்தம்,73 வது அட்ட வணை திருத்தம் இவை எல்லாம் திராவிட இயக்கங்க ளின் சாதனை. இப்படி யெல்லாம் வளர்ச்சிபெற்ற தமிழகத்தை தவிடு பொடி யாக்கும் விதத்தில் மோடி சர்க்கார் சாதாரண மக்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையை உரு வாக்க கொண்டுவந்ததுதான் நீட்தேர்வு. மிகவும் ஏழை குடும்பத் தைச் சார்ந்த தாயில்லாத பெண் அனிதா மருத்துவ கனவோடு நீட் தேர்வை எழுதினார். மருத்துவராகி கிராமத்திற்கு போய் பணியாற்றுவேன், மருத்துவ சேவை செய்வேன்,தான் பணக்காரராக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. கிராமத்தில் மருத்து வர்கள் வரமாட்டேன் என்கிறார்கள் என்பதற்காக, தான் மருத்துவராக ஆக வேண்டும் என்று அனிதா கூறி யிருந்தார்.எந்த அடிப்படை வசதியும் இல்லாத மூட்டை தூக்கக் கூடிய ஒரு தொழிலாளியின் மகள் 1176 மதிப்பெண் எடுத்திருந்தார். அதனால் அவர் மருத்துவர் ஆக முடிந்ததா. நீட் தேர்வை கொண்டு வந்ததால் தான் அவர் மருத்துவராகும் கனவு தகர்ந்தது. உயிரும் பறிபோனது. நீட்தேர்வில் முறைகேடும் ஊழலும் நடைபெறுகிறது. ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்கும் நிலையை உருவாக்க நீட் தேர்வை கைவிட வேண்டும் என்பதற்காக நாடு தழுவிய பரப்புரை பெரும் பயணம் நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெற்று வருகிறது.  வியாழனன்று  இந்தப் பிரச்சார பயணம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முடிவடைகிறது. அங்கு அனைத்து கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்பி.எழிலரசன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், காங்கிரஸ் கட்சி யின் மாவட்டத் தலைவர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சங்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

;