tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை சிரமத்தில் கொரோனா நோயாளிகள்

காஞ்சிபுரம், ஜூலை 7 - காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு  மருத்துவமனையில் போதிய ஊழியர்கள்  இல்லாததால், கொரோனா தொற்று பாதிக்  கப்பட்ட நோயாளிகள் அவதிப்படு கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்து வமனைக்கு தினந்தோறும் ஏராளமான கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.  மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு போதிய ஏற்பாடுகள் செய்வதில் பெரும் தாமதம் நிலவுகிறது.  உதாரணமாக, தொற்று உறுதி செய்யப்பட்டு  ஞாயிறன்று (ஜூலை 5) காலை 7 மணியள வில் மருத்துவமனைக்கு வந்த 5 பேருக்கு  மதியம் வரை படுக்கை ஒதுக்கவில்லை. வரவேற்பறையில் ஒரே ஒரு செவிலி யர்தான் உள்ளார். அவர் ஒருவரே படிவங்  களை பூர்த்தி செய்து, ரத்தப் பரிசோதனை  எடுத்து, பக்கம் பக்கமாக எழுதி அட்மிஷன்  போடுவதற்குள் நோயாளிகள் துவண்டு விடுகிறார்கள். மாவட்ட மருத்துவமனையில் சுமார் 175 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே  உள்ளார். அந்த மருத்துவர் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை பரிசோதனை செய்துவிட்டு வருவதற்குள், புதிதாக வந்த  நோயாளிகள் மேலும் துவண்டு பல வீனமடைகின்றனர்.
சுடுநீரில்லா மருத்துவமனை
தொற்று பாதித்தவர்கள் அடிக்கடி சுடுநீர் குடிக்க வேண்டும் என்று வல்லுநர்க ளும், அரசும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், மாவட்ட தலைமை  மருத்துவமனையில் ஒரு இடத்தில் கூட  நோயாளிகளுக்கு சுடு தண்ணீர் வழங்குவ தற்கான ஏற்பாடு இல்லை. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் நேரில்  சென்று பால், உணவு, கபசுர குடிநீர் போன்ற வற்றை வழங்குவதில்லை. மாறாக, அவற்றை கீழ்த்தளத்தில் மொத்தமாக வைத்துவிடுகின்றனர். நோயாளிகள் சென்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஊழி யர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கொண்டு வந்து தர முடியவில்லை என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூ. 5 லட்சம் என்னானது?
சுடுதண்ணீர் மற்றும் குடிநீர் நிலை  குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தண்ணீர் சுத்திகரிப்பு (ஆர்ஓ வாட்டர்) திட்டத்திற்காக பல மாதங்க ளுக்கு முன்பே 5 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாக கூறியுள்ளார். நோயாளிகளின் சிரமங்களை போக்க,  அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும். பணியாளர்கள் தேவையான அளவிற்கு நியமிக்கப்படுவார்கள். மருத்து வமனையில் எழும் அசவுகரியங்கள் உடனே  சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திங்களன்று (ஜூலை 6) மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அதிகாரி கள், மருத்துவமனை நிர்வாகிகளை கடிந்து கொண்டார். அரசு அறிவித்துள்ள விதிமுறை களை பட்டியலிட்டு, அவற்றை முறையாக பின்பற்ற உத்தரவிட்டார்.
மருத்துவர்கள் எதிர்ப்பு
கொரோனா வார்டில் ஆய்வு மேற் கொண்டு மருத்துவமனை நிர்வாகத்தை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில மருத்து வர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து  பணி செய்தனர். பேரிடர் காலத்தில் மருத்துவர்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை. இருப்பினும், மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, நிலைய மருத்துவர் பாஸ்கர் மற்றும் யோகா மருத்துவர் திலகவதி ஆகியோர் விடு முறை எடுத்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் அத்தி யாவசிய பணிக்கு வராதவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

-இ.ராமநாதன்

;