tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், அக். 5- மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால்  நேரடியாக பணி நியமனம் பெற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற மருத்துவ  மையங்களில் சுமார் 9 ஆயிரம் ஊழியர்கள் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வரு கின்றனர். ஒரே பணியை செய்யும் செவிலியர்க ளுக்கு ஊதிய முரண்பாட்டை கலைந்து  ஒரே மாதிரியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு செவிலியர் சங்க காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் லலிதா தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், வரு வாய் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சேகர் மற்றும் பலர் கோரிக்கையை வலி யுறுத்தி பேசினர்.

;