கல்பாக்கம், செப்.5- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘அறிவியலுக்கான நடைபயணம்’ கல்பாக்கத்தில் நடைபெற்றது. கல்பாக்கம் விக்ரம் சாராபாய் அரங்கத்தில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு முனைவர். அருண்குமார் பாதிரி தலைமை தாங்கினார். கணிதவியல் நிறுவனத்தின் நிர்வாகிகள் முனைவர் இராமானுஜம் , முனைவர் மூர்த்தி, ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘அறிவியலுக்கான நடைபயணமும் - பொதுக்கூட்டமும் நடை பெற்றது. இதல் இயக்குநர் வெங்கட்ராமன், கணிதவியல் நிறுவனம்-சென்னை முனைவர் இராமானுசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் என்.மாதவன் செய லாளர் ஆ.குமார், ஆர்.தனஞ்சயன், ச.வெங்க டேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.