tamilnadu

img

திருப்பெரும்புதூர் அருகே சோகம் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த  நெமிலி கிராமத்தில் செல்வப் பெருமாள் நகரில் கிருஷ்ண மூர்த்தி என்பவர் கடை வைத் துள்ளார். தன்னுடைய வீட்டில் இரண்டாவது மாடியில் உள்ள கழிவு நீர் தொட்டியை, சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சுத்தம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றபின் சரியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என் பதை பரிசோதிக்க, அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த சுரதாபிசி என்ற இளைஞர் தொட்டிக்குள் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது விஷ வாயு தாக்கியுள்ளது. அவரது கூக்குரலை கேட்டு, அந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக கிருஷ்ணமூர்த்தி தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து மூத்த மகன் கண்ணன்(23) ஓடோடிச் சென்று தனது தந்தையை தூக்க முயன்றுள்ளார். அவரையும் விஷவாயு தாக்கியுள்ளது. பிறகு, இரண்டாவது மகன் கார்த்தி (20), வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பரமசிவமும், லஷ்மிகாந்தன் என்பவரும் வரிசையாக தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.


அனைவரும் விஷவாயு தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரண்டு மகன் களும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் சரவணன், தகுந்தநபர்கள், பாதுகாப்பு உபகரணங்களோடு மட்டுமே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கவோ, பரிசோதிக்கவோ முயற்சிக்க வேண் டும் எனக் கேட்டுக்கொண்டார். சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்தவுடன் அது மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் என்றும் சார் ஆட்சியர் சரவணன் கூறினார்.

;