tamilnadu

வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பலி

திருப்பெரும்புதூர், ஆக.3-  நெல்லையை சேர்ந்த ரிதீஷ், அரியலூரை சேர்ந்த சந்திரஜீத், சிவகங்கையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் படப்பையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரடகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் வெள்ளி யன்று மாலை வேலை முடிந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஒரகடத்தில் இருந்து படப்பை நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரிதீஷ்,சந்திரஜித் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியாகினர். வினோத்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லா மல் பரிதாபமாக பலியா னார்.  இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய பேருந்து டிரைவரை தேடிவருகின்றனர்.