tamilnadu

சொந்த ஊர்  செல்ல பேருந்தை திருடியவர் கைது

பெங்களூரு: ஊரடங்கிற்கு முன் பெங்க ளூருவில் இருந்து ஆந்திரா வந்தவர் ஊர் திரும்ப முடியாததால் அரசு பேருந்தை திருடிச்  சென்று பிடிப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுரா வைச் சேர்ந்தவர் முசாமில் கான் (35). ஊரட ங்குக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரம் வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், வெள்ளி க்கிழமை நடந்தே ஊருக்கு திரும்பிச் செல்ல லாம் என முடிவு செய்து, வெள்ளிக்கிழமை அன ந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார். அங்குள்ள பணிமனை யில் பேருந்து ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்க ப்பட்டிருந்ததைக் கண்ட அவர், சட்டென யோசித்து பேருந்தை திருடிக் கொண்டு பெங்க ளூரு செல்ல முடிவெடுத்தார். பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்வதைப் பார்த்த பணிமனை  அதிகாரிகள் காவல்துறையினல் புகார் அளித்த னர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடு பட்ட காவல்துறையினர் அனந்தபுரத்தில் உள்ள  தனியார் கார் தொழிற்சாலை அருகே வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, பேருந்தை கடத்தி  வந்த முசாமில் கானை கைது செய்தனர். சொந்த  ஊர் செல்ல நினைத்தவர் தற்போது சிறை சென்றுள்ளார்.