tamilnadu

img

ஹரியானா மாநில பாஜக எம்.பி. பிரேந்திர சிங் ராஜினாமா... கூட்டணி கட்சியுடன் மோதல்

சண்டிகர்:
ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்தவர், பிரேந்திர சிங். இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றார்.2019 மக்களவைத் தேர்தலில் பிரேந்திர சிங்கின் மகன்பிரிஜேந்திர சிங், ஹரியானாவின் ஹிசார் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 இறுதியில் நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பிரேந் திர சிங்கின் மனைவி பிரேம்லதாவுக்கும் பாஜக வாய்ப்பளித்தது. ஆனால், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிடம் அவர் தோல்வி அடைந்தார். இதனால், கோபமடைந்த பிரேந்திரா சிங், கடந்த சில மாதங்களாக துஷ்யந்த் சவுதாலாவை கடுமையாக விமர்சித்து வந்தார்.ஆனால், ஹரியானாவில்தற்போது பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பதவி வகிக்கிறார். இதனால், பிரேந்திரா சிங்கின் விமர்சனம் பாஜக-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே, கடந்த நவம்பர் மாதம் பிரேந்திரா சிங் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். எனினும் 3 மாதங்களாக அவரதுராஜினாமா ஏற்கப்பட
வில்லை.தற்போது மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரேந்திராவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

;