tamilnadu

img

அசாமை மிரட்டும் மழை... நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் பலி...

கவுகாத்தி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள் பல நீரில் மூழ்கிக்கிடக்கிறது.

சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த மழைவெள்ளத்தால் நாட்டின் முக்கியமான வனவிலங்கு உயிரியல் பூங்காவில் ஒன்றான காசிரங்கா 80 சதவீத பகுதி நீரில் மூழ்கி கிடக்கிறது. இதுவரை அங்கு 9 காண்டா மிருகங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

வெள்ளத்தில் இருந்து வெளியேறி சென்ற காண்டாமிருகங்கள் மட்டுமே உயிர்தப்பியது. அவ்வாறு தப்பிய 136 விலங்குகளை காப்பாற்றப்பட்டுள்ளன. தற்போது அங்கு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதால் விலங்குகளின் சரியான பலி எண்ணிக்கைக்காக எல்லாப் பகுதிகளிலும் கணக்கெடுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக காசிரங்கா பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

;