tamilnadu

img

கரூரில் தமிழி பயிற்சிப் பட்டறை

கரூர், ஜன.2- ஆங்கில புத்தாண்டு நாளில் தமிழி பயிற்று விக்கும் பயனுள்ள தன் னார்வ வகுப்புகள் பொது மக்களுக்கு தொடங்கப் பட்டது. புதிய குழுவிற்கு ஒருநாள் தமிழி பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் என 70 பேர் தமிழி கற்பதற்காக இந்த விடுமுறை தினத்திலும் உள மகிழ்வோடு தன்னார்வமாக வந்து தமிழி கற்றனர்.  இதற்காக 400 ஆசிரி யர்கள் மற்றும் கல்லூரி மாண வர்களுக்கு தமிழி பயிற்சி அளிக்கப்பட்டு முனைவர் ராமசுப்பிரமணியன் தலை மையிலான தமிழி பயிற்று நர் குழு உருவாக்கப்பட்டுள் ளது. இந்தக் குழு தமிழ கத்தின் அனைத்து மாவட்டங் கள் மட்டுமல்லாமல், தமி ழர்கள் வசிக்கும் நாட்டின் பிற பகுதிகளிலும் தமிழி பயிற்சியை அனைவருக்கும் வழங்கும்.  திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம், பரணி தொல்லியல் சங்கம், கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மக ளிர் அறிவியல் கல்லூரி மற்றும் வளர்ச்சி அறக்கட்ட ளையுடன் இணைந்து கரூரில் தமிழி பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.  தமிழி கருத்தாளராக திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கத்தின்  தேசிய ஒருங்கிணைப்பாள ரும் தமிழி ஆர்வலருமான முனைவர் ராமசுப்பிரமணி யன் தமிழி பயிற்சியை வழங்கினார். கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி.நீலகண்டபிரியா அம்பா தலைமை வகித்தார்.  கரூர் பரணி பார்க் கல்விக் குழும செயலர் பத்மாவதி மோகனரங்கன் கலந்து கொண்டார். கரூர் எம்.குமார சாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, கரூர் சாரதா நிகேதன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இள வரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை வளர்ச்சி அறக் கட்டளை தலைவர் கவிதா ராமசுப்பிரமணியன் மற்றும் பரணி தொல்லியல் சங்க இணைச் செயலர் ஆர்.பிரியா செய்திருந்தனர்.

;