tamilnadu

img

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் அறிவியல் திருவிழா

கரூர், நவ.6- பரணி பார்க் கல்விக் குழும நிறுவன அறங்காவ லர் ஆர்.சாமியப்பன் நினை வாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. அறிவியல் திருவிழாவின் முதல் நாளான புதனன்று ஆறு முதல் பதினோறாம் வகுப்பு வரை உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். மண் மங்கலம் தாசில்தார் எஸ்.செந்தில்குமார் மற்றும் ‘துளிர்’ அறிவியல் இதழின் ஆசிரியர் எஸ்.டி.பால கிருஷ்ணன் ஆகியோர் மாநா ட்டினை துவக்கி வைத்தனர்.  இதில் பரணி பார்க் மற்றும் பரணி வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 2564 இளம் விஞ்ஞானிகள் 1282 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த அனைவருக்கும் இந்திய அரசின் அறிவியல் தொ ழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானி சான்றிதழ் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் பரணி பார்க் கல்விக் குழும முதன் மை முதல்வர் சி.ராமசுப்பிர மணியன் உரையாற்றினார். பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், கரூர் மாவட்ட தேசிய குழந் தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பிரேம்குமார், அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் காம ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;