tamilnadu

img

உடுமலையில் அறிவியல் திருவிழா

உடுமலை, பிப். 24- தேசிய அறிவியல் தின விழாவை ஒட்டி உடுமலையில் அறிவியல் திருவிழா-2020 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உடுமலை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி அறிவியல் துறை, கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடு மலை ராயல் அரிமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் அறிவியல் திருவிழா-2020 நடை பெற்றது. ஜிவிஜி கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா் ஜெயந்தி தலைமை வகித்தார். கு.சி.மணி வர வேற்றார். தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகி கள் ரவி ஆனந்த், சத்தியம் பாபு, எஸ்.எம்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். இதையொட்டி, அறிவியல் மனப்பான் மையை மாணவா்களிடம் வளா்க்கும் பொருட்டு விநாடி-வினா, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி கள் நடைபெற்றன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா். தொடா்ந்து, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளா் டி.ராமசாமி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினராக உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ரவிகுமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கி ணைப்பாளா் கண்ணபிரான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். என்எஸ்எஸ் அலுவலா் செ.சரவணன் நன்றி கூறினார்.