tamilnadu

img

பரணி பார்க் மெட்ரிக் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

கரூர், அக்.1- கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கரூர் காதப்பாறை பொரிச்சிபாளையம் கிராமத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது. துவக்க விழாவில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமை தாங்கினார்.  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சேகர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தொடர்பு அலுவலர் உமா சிறப்புரையாற்றினார். பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ஏழு நாட்கள் நடைபெற்ற இச்சிறப்பு முகாமில் கிராம மக்களுக்கு இலவச பரிசோதனை குறித்து கண் மருத்துவர் ரமேஷ், கால்நடை ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் கே.சுப்புராயன், நெகிழி விழிப்புணர்வு குறித்து டாக்டர் சாந்தி, ஆரோக்கிய மருத்துவம் குறித்து சித்த மருத்துவர் காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்து பரிசோதனை செய்தனர்.  விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் மரம் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன. முகாம் நிறைவு விழாவில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் .மோகனரெங்கன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

;