tamilnadu

img

மு.செல்லம்மாள் காலமானார்

கரூர், செப்.11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளருமான எம்.சுப்பிரமணியன் அவர்களின் தாயார் மு.செல்லம்மாள் உடல்நலக்குறை வால் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், அய்ய னம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு அரசு ஊழியர் சங்கம் மற்றும் துறைவாரி சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் முன்னாள் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.சக்திவேல், மாவட்டத் தலைவர் மு.மகா விஷ்ணன், மாவட்டப் பொருளாளர் பொன்ஜெயராம் ஆகி யோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு துறை சங்க மாவட்ட நிர்வாகள் கந்தசாமி, சண்முகம், ராஜா முகது, கணேசன், செல்லமுத்து, சாந்தி, ஜான்பாட்சா, ஜெய ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.