tamilnadu

img

குழந்தைகள் அறிவியல் மாநாடு 23 ஆய்வுகளுடன் கரூர் மாணவர்கள் பங்கேற்பு

கரூர், நவ.16- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வேலூரில் நடைபெறும் மாநில அளவிலான 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அறி வியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டத்தில்  இருந்து 23 ஆய்வுக ளை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் எடுத்து சென்றனர். அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி கரூர் ரயில்வே நிலையத்தில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்ட  செயலாளர் ஜான்பாஷா தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர்  ரோட்டரி பாஸ்க ரன், வட்டார கல்வி அலுவலர் சிவராமன், விங்ஸ் ரோட்டரி சங்க செயலாளர் சந்திரசேக ரன் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.