tamilnadu

img

4 கோடி செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல சொகுசு படகு 

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வர 4.35 கோடி செலவில் புதிய சொகுசு படகுகள் இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளது. 

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது கொரோனா உத்தரவுகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வர அனுமதியில்லை. கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அரசு போக்குவரத்து கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 150 பயணிகள் அமரும் வகையில் கோவாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு படகிற்கு எம்.எல்.திருவள்ளுவர் என்ற பெயர் கொண்ட  படகு இன்று போக்குவரத்து கழக படகு துறைக்கு வந்துள்ளது. 138 சாதாரண இருக்கைகளும், 12 குளிர் சாதனங்களுடன் கூடிய இருக்கைகளும், டிவி, பாடல்கள் கேட்கும் வசதி என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.