tamilnadu

img

கொரோனாவிலும் கருணையின்றி கல்விக்கட்டணம் வசூல் குமரியில் 26 மையங்களில் வாலிபர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜுலை 5- கொரோனா பேரிடறிலும் கருணை யின்றி கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 26 மையங்களில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்ட பொருளாளர் ரெதீஸ், மாவட்ட நிர்வாகி பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மாநிலம் தழுவிய இந்த ஆர்ப்பாட் டத்தின் பகுதியாக மேல்புறம், கழு வன்திட்டை, அருமனை, மாறபாடி, மலையடி, பழுகல், உண்ணாமலை கடை, பல்லன்விளை, நட்டாலம், வேங் கோடு, கிள்ளியூர், பாலூர், மிடால காடு, கருங்கல், கண்ணுவாமூடு, கலிங்கராஜபுரம், திருவட்டார், செட்டிச்சார்விளை, கனிகுடிவிளை, ஆண்டாம்பாறை, முளவிளை ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் உள்ளிட்ட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆன்லைன் வகுப்புகள் என குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றை தடுப்பதற்காக வும், அதனால் பாதிக்கப்பட்டவர் களின் உயிரை காப்பதற்காகவும் போராடும் மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், காவ லர்கள், தன்னார்வலர்கள் என அனை வருக்கும் பாதுகாப்பு கவசங்கள் முறையாக வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்குத் தாரை வார்க்காதே. செயற்கையாக உருவாக்கப்படும் அநியாய விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் முழக்கமிட்டனர். ஆண்டாம்பாறையில் பெட்ரோல், டீசல் மீது போடப்பட்டுள்ள வரிகளை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற முழுக்கத்துடன் இருசக்கர வாகனத்தை பாடையில் தூக்கிச் சென்று நூதன போராட்டம் நடைபெற்றது.

;