tamilnadu

உயிர்பலி வாங்கும் மீன்பிடி துறைமுகங்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு மனு

நாகர்கோவில், ஜூலை 30- கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்கம் சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்துள்ள மனு விபரம் வருமாறு: கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்கவும், அவர் களது மீன்பிடி தொழிலுக்கு பாதக மில்லாமல் தடுப்புச் சுவர்களும், தூண் டில் வளைவுகளும் அறிவியல் அடிப்ப டையில் அமைக்காமல் பல கோடி ரூபாய், மீனவர்களின் பெயரால் விர யம் செய்யப்படுகிறது என்பதை பல வருடங்களாக அரசுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளை வுகள், கடல் அலைகளுக்கு தாக்குப் பிடிக்காமல் சின்னாபின்னமாகி உள்ளது. மேலும் தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளதோடு மணலுக்குள் புதைந்தும் உள்ளன.

தடுப்புச் சுவர் களும், தூண்டில் வளைவுகளும் மீன் பிடித் தொழிலுக்கு பாதுகாப்பில்லா மல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மரணமடைந்துள்ளனர். எனவே மீனவ கிராமங்களையும், வாழ்வாதாரங் களையும் பாதுகாக்க கேரள மாநி லத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண் டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் போல் அறிவியல்பூர்வமாக முடிவெ டுத்து மீனவ பிரதிநிதிகள் உடன் கலந்து ஆலோசித்து அமல்படுத்த அரசை யும் மீன் துறையையும் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம்.  கோவளம் மீனவர் கிராமத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்தும் தூண் டில் வளைவுகள் அறிவியல்பூர்வமாக அமைக்கப்படவில்லை. அதன் விளை வாக மீனவர்களுக்கு பாதுகாப்பான நிலை அங்கு இல்லை. சமீபத்தில் பல உயிர் இழப்புகளோடு கை, கால் உடைந்து பலர் முடமாக்கப்பட்டுள்ள னர்.

தொழில் கருவிகளும் சேதமடைந் துள்ளன. பெரும் பொருளாதார நஷ் டங்களும் ஏற்படுகிறது. அங்கு அமைக் கப்பட்டுள்ள தூண்டில் வளைவை மேலும் அழிவு பாதையில் செல்லாமல் தரமாக அமைத்து கோவளம் மீன வர்களையும், மீன்பிடித் தொழிலை யும் பாதுகாக்க வேண்டும். கடந்த 21 ஆம் தேதி கோவளம் ஊரைச் சார்ந்த அந்தோணி என்பவர் இயற்கை சீற்றத் தின் காரணமாக அசுர அலையில் சிக்கி தூண்டில் வளைவில் மோதி இறந்துள்ளார். அவரது மூன்று பெண் பிள்ளைகள் எவ்வித உதவியும் இல்லாமல் தனிமைப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டணம் ஆகிய நான்கு இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரு கின்றன. இதில் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந் துள்ளது.

துறைமுகத்தின் முகத்துவா ரத்திலும், துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகமான அளவில் ராட்சத அலைகளால் மணல்மேடு களாக குவிவதால் மீன்பிடித் தொழி லுக்கு இடையூறாக இருப்பதுடன் பல உயிர் இழப்புகளும், மீன்பிடி கலன் கள் சேதம் அடைவதும் ஏற்பட்டு வரு கிறது. சமீபத்தில் மீன்பிடித் தொழி லுக்கு சென்று துறைமுகத்திற்குள் வரும்போது கட்டுக்கடங்காத கடல் அலைகளால் மணல் மேடுகளில் மோதி இரு மீனவர்கள் உயிரிழந்துள்ள னர். இது தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. குறிப்பாக, கடல் சீற்றம் உள்ள காலங்களில் மணல் மேடுகளும் பெருமளவில் உருவாகிறது. இந்த நிலைமை உருவாகாமல் இருக்க துறைமுகத்தை அமைக்கும்போது துறைமுகத்தின் பாதுகாப்பான வசதி களை சரியாக மதிப்பிட்டு அமைக் கப்பட்டிருந்தால் இந்த உயிர் பலிகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

மீன்பிடித் தொழிலும் பாதித்திருக்காது. இது போன்ற மோசமான நிலைமைக்கான காரணங்களை கண்டுபிடித்து மீன் பிடித் தொழிலுக்கு வசதியாகவும், உயிர் பலிகளை தடுத்திடவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் உயிர் பலியான முள்ளூர் துறையை சார்ந்த மீனவர் அந்தோணி, மார்த்தாண்டம் துறையைச் சார்ந்த மீனவர் சிபு ஆகியோரின் குடும்பங் களை பாதுகாத்திட தலா ரூ.25 லட்சம் வீதம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படை யில் அரசு வேலை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை, மாவட்ட தலை வர் கே.அலெக்ஸாண்டர், பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, நிர்வாகி கள் டிக்கார்தூஸ், அலெக்ஸ் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித் தனர்.

;