tamilnadu

img

கொரோனா நிவாரணம் ஆயிரம் ரூபாய் பெற அலைக்கழிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள்

நாகர்கோவில்,  ஜூன் 22- கன்னியாகுமரி மாவட்டத் தில் தொழிலாளர் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்ட  அதிகாரிகளின் அலட்சி யத்தால் அரசு அறிவித்த நிவா ரண உதவியை பெற கட்டு மானம் மற்றும் அமைப்பு  சாரா தொழிலாளர்கள் அலைந்து கொண்டிருக் கின்றனர். கொரோனா பரவல் கா ரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப் பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டமாக நிவாரண உதவியாக 1000 ரூபாய் வீதம் வழங்கியது.  மேலும் ரேசன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சமை யல் எண்ணெய் என அத்தி யாவசிய பொருட்களும் வழ ங்கபட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமை ந்துள்ள தொழிலாளர் நல வாரிய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலர்களின் அலட்சியத்தால் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் 60 வயது முடிவடைந்த பதிவு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கும், ஓய்வூதியம் பெற்று வரும்  தொழிலாளர்கள் ஆயுள் சான்று எப்போது அளிக்க  வேண்டும் என்ற தகவலை  தொழிலாளர் நல வாரிய  அதிகாரிகள் வெளியி டாததால் தினந்தோறும் அலு வலகத்திற்கு வந்து செல்வ தால் தங்களை அலைக்க ழிப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.

;