tamilnadu

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் சென்றால் அனுமதி

நாகர்கோவில், ஜன. 1- வாக்கு எண்ணும் மையங்களில் புகைப்பட அடையாள அட்டையடன் சென்றால் மட்டுமே வேட்பாளர்கள் அனு மதிக்கப்படுவார்கள். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் மு.வடநேரே வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்கு 27.12.2019 மற்றும் 30.12.2019 தினங்களில் இரு கட்டங்களாக நடை பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள்  அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளது. மேற்படி வாக்கு சீட்டுகளை எண்ணும் பணிகள் 02.01.2020 அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணி க்கை அலுவலர்களால் மேற்கொள்ள ப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களால் தேர்வு செய்யப்படும் முகவ ர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டு மே வாக்கு எண்ணும் மையத்தி ற்குள்அனுமதிக்கப்படுவர். கிராம ஊரா ட்சி வார்டு உறுப்பினருக்கான வேட்பா ளர்முகவருக்கு வெள்ளை நிற அடை யாள அட்டையும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வேட்பாளரகள்; முகவர்களுக்கு முறையே இளஞ்சி வப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற அடை யாள அட்டைகளும் வழங்கப்படும்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரையில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் முகவர் (யாரேனும் ஒருவர்) மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனு மதிக்கப்படுவர். வேட்பாளர் முக வர்கள் தங்களுக்கான வாக்கு எண்ணி க்கை முடிவடைந்ததும் அறையிலி ருந்து வெளியேற வேண்டும். வாக்கு  எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற  வேட்பாளர் மட்டுமே வெற்றி சான்றி தழை பெற தேர்தல் நடத்தும் அலுவ லரின் அறைக்குள் அனுமதிக்கப்படு வார். வாக்கு எண்ணிக்கை மையங்க ளிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூ டாது. மேலும் வாக்கு எண்ணும்  மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் தங்களுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் மை பேனா,எளிதில் தீப்பிடிக்கும் பொரு ட்கள், கத்தி, பிளேடு உள்ளிட்ட ஆயு தங்கள், கைபேசி மற்றும் உணவு பொரு ட்களை கொண்டு வர அனுமதியில்லை. வேட்பாளர்கள், முகவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காத்திருக்கும் அறையில் மட்டுமே உண வருந்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் பென்சில் மற்றும் உருள்முனை பேனா மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் அனைத்து பக்கங்களிலும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன்; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு அறையிலும் தலா இரு வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணம் பணியினை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். அனைத்து வாக்கு எண்ணும் அறைகளிலும் நுண் பார்வை யாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். மேலும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவசர தேவைகளுக்கென மருத்துவ குழு வுடன் கூடிய ‘108 ஆம்புலன்ஸ்” வாக னம்,தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கவும் மற்றும் வாக்க எண்ணம் மையங்களில் தடையில்லா மின்சாரம்  வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

;