கர்நாடக எம்பி அனந்தகுமார் ஹெக்டே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் தேசவிரோதிகள் என கூறியதை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.