tamilnadu

img

ஆட்டோ டிரைவர்கள் சங்க  பெயர்ப்பலகை திறப்பு 

 நாகர்கோவில், செப்.29- கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சிஐடியு) புதிய கிளை துவக்கவிழா மற்றும் பெயர்பலகை திறப்பு விழா கடியப்பட்டணத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.  இதற்கு, ஆட்டோ சங்க கிளை தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன் பெயர்பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ், கடியப்பட்டணம் பங்குபணியாளர் நியூமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக்குழு உறுப்பினர் புவனேந்திரன் ஆகியோர் பேசினர்.  இதில் சங்க கிளை செயலாளர் ரெதீஸ், பொருளாளர் அந்தோணிகுமார், ஊர் பிரமுகர்கள் லீமாறோஸ், அல் காந்தர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.