tamilnadu

குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது

நாகர்கோவில், ஜன.16- கன்னியாகுமரி அரசு தோட்டக் கலைப் பண்ணை வளாகத்தில் சுற்றுசூழல் பூங்கா வில், பொங்கல் திருநாளை முன்னிட்டு 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் மாவட்டத்தில் முதன் முறையாக மலர் கண்காட்சி - 2020 நடைபெறுகிறது.  இதன் துவக்க விழா வியாழனன்று நடை பெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் வடநேரே தலைமை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் என்.சுரேஷ் ராஜன், ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதி நிதி ந.தளவாய் சுந்தரம் கண்காட்சியை திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் குழந்தைகள் கண்டு மகிழ்ந்திட நீர் வீழ்ச்சி, புல்வெளிகள், மலர் பொம்மைகள், காய்கறி சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சத்திய ஜோஸ், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் எம்.அசோக் மேக்ரின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணபாலன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;