நாகர்கோவில், மே 28- கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழனன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்துள்ள மனு விபரம் வரு மாறு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 மீனவர் கிராமங்கள் இருக்கின்றன. இந்த மீனவர் கிராமங்களில் வாழ்கின்ற அனைவரும் மீன்பிடித் தொழிலை மட்டும் ஆண்டு முழு வதும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சில தூண்டில் வளைவுகளும் இருக்கின்றன. இந்த மீன்பிடி துறைமுகங்களில் துறைமுகம் அமைந்துள்ள ஊர் மீனவர்கள் மற்றும் வேறு மீனவர் கிராமங்களில் உள்ளவர்களும் அங்கு சென்று மீன் விற்பனை செய்யவோ, நாட்டு படகுகளை நிறுத்தி வைக்கவோ அனுமதி இல்லை. இதனால் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு இல்லாத மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்குள் ஆளா கின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஏற்படும் கடல் சீற்றத்தாலும், இயற்கை பேரிடர்களாலும் தொழில் செய்ய முடியாத சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் இக்கால கட்டங்களில் கேள்விக்குறியாகி பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிந்த விஷயமாகும். இந்த மீனவர் கிராமங்களில் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை மட்டுமின்றி அவர்கள் வாழ்ந்துவரும் வீடுகளும், தொழில் உபகரணங்களும், உடமைகளும் அழிந்து கொண்டிருப்பதை அரசும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. மீனவர் கிரா மங்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட மீன வர் அமைப்புகளின் வற்புறுத்தலுக்கு பின்பு பல மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் தரமானதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தகாலத்தில் மீன்பிடித் தொழில் செய்ய முடி யாத அளவிற்கு பெரும் காற்றும், கடல் சீற்றமும் ஏற்பட்டு வருகிறது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்வதற்கு வசதியாக நான்கு மீன்பிடித் துறை முகங்களை பயன்படுத்தி இக்காலத்திற்கு சில நிபந்த னைகளுடன் மீன்பிடிக்க அனுமதிப்பது மீனவர்களின் வாழ்க்கைக்கு பேருதவியாக அமையும் என்பதை மீன் துறையும், மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். மேலும் கோவிட் 19 காரணமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனு மதிக்கப்பட்டது. மேலும் சில ஊர்களுக்கு 4 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவைகளை மாற்றி தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையை சீர் செய்திடவும், வறுமை, பசி, பட்டினியில் இருந்து பாதுகாத்திடவும், வாரத்தில் 6 நாட்களும் மீன்பிடித்தொழில் செய்திடவும், பிற்பகல் ஒரு மணி வரை தொழில் செய்ய அனுமதித்தும் மீன வர்களின் நலன் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் கடந்த காலங்களில் கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் துறை, அன்னை நகர், புத்தன் துறை, கேசவன் புத்தன்துறை, பொழிக்கரை, கோவளம், பெரியகாடு ஆகிய ஊர்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் வள் ளங்கள், கட்டுமரங்கள் போன்ற நாட்டுப்படகுகளை துறைமுகத்தை ஒட்டி மேற்குப்பகுதியிலிருந்து ஏற்க னவே இருந்த நடைமுறையின் படி தங்கள் நாட்டுப்படகு களை நிறுத்துவதற்கும், தொழில் செய்வதற்கும் அனு மதி அளித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் கே.அலெக்ஸாண்டர், பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.