tamilnadu

img

ஊதியக்குழு பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி ஆர்பாட்டம்

ஊதியக்குழு பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி சிதம்பரத்தில் அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க  கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தொமுச செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கடலூர் மண்டலத் தலைவர் பழனிவேல், சிஐடியு மாநில துணைத் தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் மணிவண்ணன், கடலூர் மண்டல துணைத் தலைவர் சிவகுமாரவேல், துணைச் செயலாளர் பாலமுருகன், பணிமனை செயலாளர் அரோக்கியதாஸ், பொருளாளர் கனகராஜ், அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மண்டலத் தலைவர் சுந்தர் உள்ளிட்டவர்கள் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினர்.