சிதம்பரம், பிப். 26- தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: விழுப்புரத்தில் காலை 5:55 மணிக்கு புறப்படும் (56873) விழுப் புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து காலை 5:40 மணிக்கு புறப்படும். மயிலாடுதுறை - விழுப்புரம் பய ணிகள் ரயில் (56874) விழுப்புரத் தில் பிற்பகல் 2:30 மணிக்கு புறப்ப டும். விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56875) மயிலாடு துறையில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு புறப்படும். மயிலாடு துறை - விழுப்புரம் பயணிகள் ரயில் (56876) விழுப்புரத்தில் மாலை 5:40 மணிக்கு புறப்படும். விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56877) மயிலாடுதுறையில் இருந்து மாலை 5:45 மணிக்கு புறப்படும். மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில் (56878) விழுப்புரத்தில் இருந்து மாலை 6:55 மணிக்கு புறப்படும். காட்பாடி பயணிகள் ரயில் (56886) காட்பாடியில் இருந்து அதிகாலை 4:55 மணிக்கு புறப்படும். இந்த சேவை மார்ச் 1ஆம் தேதி முதல் மின் சார இன்ஜின் மூலம் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதி காரி ஒருவர் கூறுகையில், இத் தனை ஆண்டுகளாக இந்த பாதை களில் டீசல் எஞ்சின் மூலம் ரயில் கள் இயக்கப்பட்டது. தற்போது மின்சாரம் மூலம் இயக்கப்படுவ தால் அதிக சத்தம் இல்லாமல் ரயில் வண்டிகள் வரும். எனவே பொதுமக்கள் ரயில் பாதையின் அருகே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.