tamilnadu

img

தேர்தலில் வெற்றிபெற்றவரைத் தோற்றதாக அறிவித்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

சிதம்பரம், ஜூன் 27- சிதம்பரம் அருகே தேர்த லில் வெற்றிபெற்றவரைத் தோற்ற தாக அறிவிக்கப்பட்டது  தகவல்  அறியும் உரிமைச் சட்டம்  (ஆர்.டி.ஐ) மூலம் வெளியாகி யுள்ளது.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒன்றிய வார்டு களுக்கு கடந்த டிசம்பர் மாதம்  தேர்தல் நடைபெற்றது. இதில் 3-வது தனி வார்டில் திமுக சார்பில் அமுதா ராணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் தற்போது திமுக மாவட்ட மகளிர் அணி  அமைப்பாளராக உள்ளார். கடந்த 1996-ல் கீரப்பாளையம் ஒன்றிய  தலைவராகவும் பதவி வகித்  துள்ளார். இவரை எதிர்த்து  கவிதா (அமமுக) போட்டி யிட்டார். இதன் வாக்கு எண் ணிக்கை ஜன 2-ம் தேதி நடைபெற்றது.  அதில் கவிதா 33 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தாகத் தேர்தல் அதிகாரி ஜெயக்குமார் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அதி காரியிடம் வாக்கு எண்ணிக்கை யில் தவறு உள்ளது என்றும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அமுதா ராணி  முறையிட்டுள்ளார், அதனைத்  தேர்தல் அதிகாரி கண்டு கொள்ளாமல் காவல்துறை மூலம்  பெண் என்று பாராமல் கழுத்தைப்  பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே தள்ளியுள்ளனர். இந்த நிலையில் அதே வார்டில் போட்டியிட்ட காஞ்சனா என்பவர் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தில் அவர் பெற்ற  வாக்கு விபரத்தைக் கேட்டுள் ளார். அதில் அமுதா ராணி 1172 வாக்குகள், என்றும் கவிதா  1066 வாக்கு, காஞ்சனா 1026  வாக்குகள் பெற்றதாக கீரப்  பாளையம் ஒன்றிய பொது  தகவல் அலுவலர் கொடுத்துள்ள னர். இதனைப் பார்த்த திமுக சார்பில் போட்டியிட்ட அமுதா  ராணி அதிர்ச்சி அடைந்து  மாநில தேர்தல் ஆணையத்தின்  செயலாளர் சுப்பிரமணி யத்திற்குக் கடிதம் எழுதி யுள்ளார்.

அதற்கு அவர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளதாகக் கடிதம் அனுப்பி யுள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற வரைத் தோற்றவராக அறி வித்தது ஆர்.டி.ஐ மூலம் அம்பல மாகியுள்ளது. இது திமுகவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையின் போது நடந்தி ருக்க வாய்ப்பு உள்ளது என்று  பொதுமக்கள் மத்தியில் கூறப்படு கிறது.

;