குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து சிதம்பரம் மேலவீதி அண்ணா சிலை அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சரவணன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ராஜா, விசிக மாவட்டச் செயலாளர் அறவாழி உள்ளிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
*******************
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
*******************
திருவண்ணாமலை மாவட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்களை, திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, எ.வா. வேலு விடம் சிபிஎம் தலைவர்கள் ஒப்படைத்தனர். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், நகரச் செயலாளர் எம். ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*******************