கடலூர், செப்.29- நெய்வேலி பழுப்பு நிலக்கரி பணியாளர்கள் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாணய சங்கத்தின் 51வது ஆண்டு பேரவைக் கூட்டம் நெய்வேலி மெயின் பஜார் அருகில் அமைந்துள்ள சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தலைமை வகித்த தலைவர் சு.இந்திரா, 2018-19க்கான ஆண்டு அறிக்கையினை வாசித்தார். துணைத் தலைவர் பி.மணிமாறன் வரவேற்றார். இயக்குநர் கவிதா இரங்கல் தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் செயலாளர் பொறுப்பு பு.நடனசேகரன் வரவு - செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். உதவி செயலாளர் பொறுப்பு பு.முத்து இலாப நட்ட கணக்கு பட்டியல் மற்றும் தணிக்கைச் சான்று சமர்பித்தார். இளநிலை உதவியாளர் மு.மாணிக்கவேலு 2019-20 ஆம் ஆண்டின் உத்தேச திட்டத்தை முன்வைத்தார். இந்த சங்கம் தணிக்கை துறையால் ‘யு’ வகுப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாண்டில் 1,616 உறுப்பினர்களுக்கு ரூ.149,20,52,206 கடன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.69 லட்சம் கூடுதலாகும். ரூ.15,44,12,015.11 கோடியை லாபமாக பெற்றுள்ளது. லாபபணத்தில் உறுப்பினர்க ளுக்கான பங்கு ஈவுத்தொகை மற்றும் சிக்கன சேமிப்பு வட்டி அதிகபட்சமாக ரூ.37000 வரை அவரவர் ஊதிய வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30 ஆம் தேதி செலுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் சங்கத்திலிருந்து பிடித்தம் செய்த தொகை ரூ.1,03,23,425-யை உயர்நீதி மன்றம் வரை சென்று வழக்கில் வாதாடி வட்டியுடன் பணத்தை திரும்பப் பெற்றதற்கு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். ஓவ்வொரு மாதமும் சிக்கன சேமிப்பு ரூ.1000 உயர்த்தி ரூ.3000 மாக ஊதியத்தில் பிடித்தம் செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இயக்குனர்கள் யு.ஆரோக்கியதாஸ், ஆ.அன்பழகன், சு.லட்சுமணன், சு.ரேவதி, என்.வீராசாமி. மு.அண்ணாதுரை மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் சு.தாமோதரன் நன்றி தெரி வித்துள்ளார்.