கடலூர், ஜூன் 15- சமூக வலைதளத்தில் தன்னுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட தால், கல்லூரி மாணவி ராதிகா, காதலன் விக்னேஷ் ஆகியோர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளிய்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ராதிகா மற்றும் அவரது உறவினரும், காதலருமான வடலூர் பார்வதி புரத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியின் முகநூல் கணக்கில் வெளிநாட்டு பெண் ஒருவரின் ஆபாச படத்து டன் ராதிகாவின் படத்தையும் சேர்த்து வெளி யிட்டதால், அதிர்ச்சியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதும், அதனை யடுத்த அவரது காதலன் விக்னேஷ வீணங்கேனி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் காணபட்டதும் நெஞ்சை பதறச் செய்கிறது. ஆபாசபடம் வெளியிட்டதாக வடலூர் செங்கல்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களை வரைமுறை யின்றி பயன்படுத்தும் மோசமான சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், முகநூல் பதிவில் துவங்கிய இப்பிரச்சினை இரு இளம் உயிர்களை அநியாயமாக பலிவாக்கி யுள்ளது. வலைதளங்களை முறைபடுத்திட வேண்டியதின் அவசியத்தை இது உணர்த்து கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்த பகுதியில் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிட மாவட்ட காவல்துறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்திடவும், உரிய விசாரனை மேற்கொண்டு உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.