tamilnadu

வங்கிக் கணக்கில் குறைவாக பணம்: நிவாரணத்தில் பிடித்தம்

கடலூர், மே 23- வங்கிக் கணக்கில் குறைந்தளவு பணம்  இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இல்லையென்ற  காரணத்தைக் கூறி நிவாரணத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் சுமார் 1.80  லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில்  சுமார் 70 ஆயிரம் பேருக்கு புதுப்பித்தல், ஆதார் இணைப்பு இல்லை எனக் காரணம் கூறி நிவாரணம் வழங்கப்படவில்லை. 50  நாட்களுக்கும் மேலாக வேலைக்குச் செல்லா மல் வீட்டிலிருக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு பதிவு செய்துள்ள அனைவருக்கும் நிவாரண உதவி  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணத் தொகை தொழிலாளர்களின் வங்கிக்  கணக்கில் வரவு வைக்கும் போது குறைந்த பட்ச இருப்பு வங்கிக் கணக்கில் இல்லை யென்ற காரணத்தைக் கூறி நிவாரணத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்கின்  றன. பேரிடர் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்வது நல்லதல்ல. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மாவட்டத்தில் அமைப்பு சாரா நல வாரியம் மூலமாக சுமார் 2,500 பேர்  மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெற்று  வருகின்றனர்.

அவர்களுக்கு கடந்த 9 மாதங்க ளாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அரசு  அறிவித்த நிவாரணத் தொகையும் இவர்க ளுக்கு பொருந்தாது எனக்கூறி வழங்கப்பட வில்லை. தற்போதைய இக்கட்டான சூழலில்  ஓய்வூதியர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்  பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 9 மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;