tamilnadu

கடலூர் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்துக: சிபிஎம்

கடலூர், ஆக. 13- கடலூர் மாவட்டத்தில்  பிசிஆர்  பரி சோதனைகளை விரிவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கட லூர் மாவட்டத்தில் 59,220 பி சிஆர் பரி சோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 5,066 நபர்களுக்கு தொற்று உறுதி செய்  யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவி லியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வரு கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாது காப்பு சாதனங்களை உறுதி செய்திட வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிசிஆர் பரிசோதனை நடத்த  ஏற்பாடு செய்ய வேண்டும்.

 பிசிஆர் பரிசோதிக்கும்  இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தபடி கட லூர் தலைமை மருத்துவமனையில் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். நான்கு மாதங்களாக செயல்படாத  தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், குழந்தைகள் நல மருத்துவ மனைகள் அனைத்தையும் திறந்து உரிய பாதுகாப்போடு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாண வர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்களில் பாட புத்தகங்களுக்கான தொகையை மட்  டும் வசூலித்து பாடப்புத்தகங்களை வழங்க  வேண்டும். கல்விக் கட்டணம் செலுத்தி னால்தான் புத்தகம் வழங்குவோம் என்ற நிலையினை மாற்றிட வேண்டும். நுண் நிதி  நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மக்களிடம் சென்று கடனை செலுத்த கட்டாயப்படுத்துவதை தடுத்து, டிசம்பர் மாதம் இறுதிவரை கடன் கட்டுவதற்கான காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;