tamilnadu

கடலூரில் மீன்பிடித் தொழிலைத் துவங்க மீனவர்கள் தயக்கம்

கடலூர், மே 31- கடலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் மீன்பிடிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் மீனவர்கள் மீன்பித் தொழி லைத் துவங்குவதற்கு  தயக்கம் காட்டி வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்  வரை வங்கக் கடலோரப் பகுதிகளில் மீன்  பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும். தற்போது  கொரோனா பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னதாகவே இத்தடை விதிக்கப்பட்டதால் ஜூன் 1 ஆம் தேதி முதல் மீன்பிடிக்கலாம் என  அரசு அறிவித்தது.  ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மீன்  பிடிக்கச் செல்வதில் மீனவர்கள் தயக்கம்  காட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து  கடலூரில் மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. மீன்வளத் துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன், உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி, கோட்டாட்சி யர் ப.ஜெகதீஸ்வரன் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மீனவர்கள் தரப்பில் கூறுகை யில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக ஒரு படகு புறப்பட்டால் ரூ.2 லட்சம் செலவாகும். ஆனால், பிடித்து வரப்படும் மீனை வெளி மாவட்டம், வெளிமாநில வியாபாரிகள் வந்து  வாங்கிச் செல்லவில்லையெனில் நஷ்டம் தான் ஏற்படும். எனவே அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி  எழுப்பினர். மேலும், மீன் பிடித்து வந்த பின்னர்  வழக்கம் போல் பொது ஏலம் விடுவதற்கு தடை விதிக்கக் கூடாதெனவும் வலியுறுத்தி னர்.  ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் மீனவர்  களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடி யாது என மீன்வளத்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீனவர்  கிராமங்களிடையே ஆலோசித்த பின்னர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்து கலைந்துச் சென்றனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி கூறு கையில், வழக்கமாக ஜூன் 15ஆம் தேதிக்குப் பின்னரே மீன்பிடிக்க அனுமதிக்கப்படும். எனவே, அதற்கு சில நாட்களுக்கு முன்பு பட கினை பழுதுபார்த்தல், தேவையான பொருட்  களை சேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடு வோம். தற்போது கொரோனா பொதுமுடக் கத்தால் பல்வேறு தொழில்கள் நடைபெறாத தால் படகினை பழுதுபார்க்க முடியவில்லை. இதனால் உடனடியாக கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாது என்றார்.

;