tamilnadu

img

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வேண்டாம்: ஊராட்சித் தலைவர்கள்

கடலூர், மார்ச் 5- கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றிய  ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜி.தமிழ்வாணன், கவுரவத் தலை வர் கே.பாபுராஜன், பொருளாளர் எஸ்.விஜய குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வனிடம் மனு அளித்தனர். ஊராட்சிமன்ற பணிகளுக்கு தற்போது ஆன்லைன் மூலமாக செலுத்தப்படும் நேரடி  பணப் பரிவர்த்தனை முறையை மாற்றி ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு முழு  சுதந்திரம் அளிக்கும் பழைய நிலையை  கொண்டு வர வேண்டும், சட்டமன்ற உறுப்பி னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவது போன்று அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் சம்ப ளமும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும், தின சரி பயணப்படி வழங்க வேண்டும், காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அம் மனுவில் வலியுறுத்தினர். துணைத் தலைவர் ஜி.மாரியப்பன், துணைச் செயலாளர்கள் எஸ்.பத்மசுந்தரி, கே. வெற்றிவேல், நிர்வாகிகள் கே.வினோதா, என்.இளையசிங்கம், ஜி.திருமாவளவன், பி.கிருபாகிரி ஆகியோர் உடனிருந்தனர்.