சிதம்பரம், நவ.5- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரக் குழு உறுப்பினர் கலிய மூர்த்தி தலைமையில் மீனவர் காலனி, பரங்கி தோட்டம், வாழைத்தோட்டம், நந்தவனம், சுவாதி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிதம்பரம் சாராட்சியர் விசுமகாஜனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், மேற்படி தெருக்க ளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் தோன்றிய குழாய்கள் புதைத்து அப்படியே மண்ணைத் தள்ளி மூடி சென்றதால் சாலைகளில் மேடு பள்ளமாக நடக்கக்கூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் முதி யோர் குழந்தைகள் மழை நேரங்களில் வழுக்கி விழுந்து அடிபட்டு செல்கிறார்கள். பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை ஏதுமில்லை. மீனவர் காலனியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. மூன்று மாதமாக வேறு இடங்களு க்குச் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். எனவே மேற்படி சாலைகள் மற்றும் குடிநீர் வசதியை உடனே சரி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டனர்.