tamilnadu

img

சிஐடியு வின் பொன்விழா ஆண்டு

சிஐடியு வின் பொன்விழா ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், செயலாலர் பி.கருப்பையன், மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.பவனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு பொன் விழா துவக்க ஆண்டையொட்டி புதுச்சேரியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  செகாஆர்ட்கேளரியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்திற்கு சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கத்தில் சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவர் பொன்முடி பங்கேற்று பேசினார். பிரதேசச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன், கலியன், ராமசாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.