tamilnadu

சிதம்பரம் வீனஸ் பள்ளி 100% தேர்ச்சி

சிதம்பரம், ஏப். 20- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில் இருந்து தேர்வு எழுதிய 256 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி 600க்கு 572 மதிப்பெண் பெற்று சிதம்பரம் வட்டார மெட்ரிக் பள்ளிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.500 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 39 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த ஆசியர்களுக்கு வீனஸ் கல்விக் குழும தாளாளர் எஸ்.குமார், மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி, பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜி.மகேஷ் சுந்தர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

;