tamilnadu

img

பாதிரியார் மீது தாக்குதல்: மக்கள் ஒற்றுமை மேடை ஆர்ப்பாட்டம்

கடலூர், அக். 31- கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரத்தில் செப்.29 ஆம் தேதியன்று வீடு திறப்பு விழாவிற்கு சென்ற பாதிரி யார் மீது தாக்குதல் நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த தாக்குதலில் கிறிஸ்தவ பாதிரியார்கள் திருநாவுக்கரசு, ஜான்பால், கர்ப்பினி கீர்த்தனா ஆகி யோர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட வர்கள் மீது தாமதமாக பொய் புகார் பெற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் ஒற்றுமை மேடை புகார் தெரிவித்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு கண்ட னம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்கினை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாவட்ட த்தில் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கி பாது காப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியு றுத்தி இந்த அமைப்பு சார்பில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் அமைப்பாளர் கோ.மாதவன் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், வி.சுப்புராயன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன்,  நகரச் செய லாளர் ஆர்.அமர்நாத், ஒன்றிய செயலாளர் ஜே.ராஜேஷ்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.குளோப், அரி கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதிச் செயலாளர் பா.தாமரைச் செல்வன், மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாநில அமைப்புச் செயலாளர் தி.ச.திருமார்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.குமார்,  மனிதநேய மக்கள் கட்சி ஷேக்தாவூத், தமிழக வாழ்வுரிமை கட்சி அருள்பாபு, மதிமுக வை.ராம சாமி, குடியிருப்போர் நலச்சங்கம் மு.மருதவாணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பல்வேறு அமைப்பினர் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் திரளாக பங்கேற்றனர். பேராயர் இம்மானுவேல் நன்றி கூறினார்.