சிதம்பரம், ஜூலை 13- குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம் பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகி மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சாம்ராஜிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற செயற் பொறியாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரி களுடன் கலந்து பேசி தண்ணீர் திறப்ப தற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.