tamilnadu

2011 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஆணையத்திடம் விளக்கம் கேட்க முடிவு

கடலூர், பிப்.19- கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறை கேடு தொடர்பாக ஆணையத்திடம் விளக்கம் கேட்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தீபா கூறுகையில், ‘நிர்வாக காரணங்களுக்காக இந்த விசாரணை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. தற்போது, 2019 ஆம் ஆண்டில் நடை பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணை யில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள் ளது’ என்றார். இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகையில், கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னையிலுள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு 2011 ஆம் ஆண்டில் நடை பெற்ற குரூப்-2 தேர்வில் முறைகேடு நடை பெற்றிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திட சென்னை அலுவலகம் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே சந்தேகத்திற்குரிய 12 நபர்களிடம் விசாரணை நடத்த முடி வெடுக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது, 2019 ஆம் ஆண்டிற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதில் முழு கவனத்தையும் செலுத்துவதற்காகவும், அதன் பின்னர் இந்த விசாரணையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் இந்த விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சந்தேகத்திற்குரிய 12 பேரும் தற்போது பணியில் இருப்பதால் இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவர்களது விளக்கத்தைப்  பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தற்போது விசாரணை நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறைகேட்டிற் கான மூலகாரணமே கடலூர் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு முறை கேடு தான். எனவே, இதனை விசாரணை நடத்தினால் அனைத்து முறைகேடுகளும் தானாகவே வெளிச்சத்திற்கு வந்து விடுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

;