tamilnadu

img

உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், பிப். 5- நாமக்கல், சேலம் ஆகிய மாவட் டங்களில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி செவ்வா யன்று நடைபெற்றது. பொதுமக்களிடையே புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் பிப். 4ஆம் தேதியன்று உலக புற்றுநோய் தினம் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில் நாமக்கல்லில் உலக புற்று நோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். இப்பேரணி யானது நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல் அலுவலகம் வழி யாக திருச்சி சாலை, நாமக்கல் அரசு தலைமை மருத்துவம னையை வந்தடைந்தது. இப்பேர ணியில் அரவிந்த் செவிலியர் கல்லூரி, பாவை செவிலியர் கல் லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய பதாகைகளை ஏந்தி சென்ற னர். இந்நிகழ்ச்சியில் இணை இயக் குநர் (மருத்துவ பணிகள்) மரு.எம். சாந்தி உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் மற்றும் அரவிந்த் செவிலி யர் கல்லூரி, பாவை செவிலியர் கல் லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சேலம் 

இதேபோல்,சேலத்தில் இந் திய மருத்துவ சங்கம் சார்பில் நடை பெற்ற உலக புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் உலக புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி  சேலம், அரி யலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. முன் னதாக, இந்திய மருத்துவ சங்கத் தின் தலைவர் பிரகாசம் இப்பேர ணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணியானது 1008 லிங்கம், ஆட்டையாம்பட்டி சாலை,வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவிகள் பதாகைகள் ஏந்திய வாறு பேரணியில் வந்தனர்.  இதில், மருத்துவ சங்க நிர்வாகி பிரகாசம், மருத்துவர்கள் செல்வக் குமார், சசிகுமார் உள்ளிட்ட   ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.