tamilnadu

img

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழப்பு

கோவை, ஜூன் 22 -  ஆனைகட்டி அருகே வாயில் படுகாயத் துடன் சுற்றித்திரிந்த 10 வயது ஆண் யானை  சாப்பிடமுடியாமல்  உடல் நலக்குறைவு ஏற் பட்டு உயிரிழந்தது. அவுட்டுகாய் கடித் ததால் மரணம் ஏற்பட்டதா என வனத்துறையி னர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே  உள்ள ஜம்பு கண்டியில், தோட்டமொன்றில் வாயில் காயத்துடன் ஆண் யானை நிற்பதாக வனத்துறையினருக்கு கடந்த 20ஆம் தேதி  தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வன சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறை மருத் துவகுழுவினர் தோட்டத்திற்கு சென்று 10  வயதான ஆண் யானைக்கு சிகிச்சை அளித்த னர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதி லும் உடல் மெலிந்து காணப்பட்ட யானை  நடக்க முடியாமல் ஞாயிறன்று படுத்துக் கொண்டது. படுத்த நிலையிலும் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு தினங்களாக பழங்களில் மருந்து கள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில் காட்டு யானை நேற்றிரவு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தது. இதனையடுத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய் வதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர். யானையின் வாயில் படு காயம் இருந்ததால் சாப்பிட முடியாமல் உயிரிழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;